Thursday, 31 October 2013

ஜெயமோகன்

இவர் பிறந்தது 1962, ஏப்ரல் 22இல். பள்ளி நாள்களில் இரத்னபாலா என்கிற சிறுவர் இதழில் முதல் கதையை எழுதினார். 1987இல் கணையாழியில் எழுதிய ‘நதி’ சிறுகதை பரவலாகக் கவனம் பெற்ரது. 1988ல் எழுதப்பட்ட ‘இரப்பர்’ நாவல் அகிலன் நினைவுப் போட்டியின் பரிசைப் பெற்றது. இது தவிர கதாவிருதும் சம்ஸ்கிருதி சம்மான் தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் எழுதிய பல புதினங்கள் தமிழ் இலக்கிய உலகத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. திரைப்படத் துறையிலும்
இவரது பங்களிப்பு தொடர்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகன்

வரமாய் வர


                                                      எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று
ஏற்றங்கள் சொல்லி நின்றார்
இனிய நம் தமிழிலே சொல்லியே தமிழர்கள்
எல்லோர்க்கும் மகிழ்ச்சி தந்தார்
அல்லா ரக்கா ரகுமான் ஆஸ்கரே வென்றாலும்
அடக்கத்தின் உருவம் கண்டீர்
அதனால்தான் தந்தையின் ஆசியால் வந்தது
ஆஸ்கரும் என்று சொன்னார்




ஆண்டவன் மொழி தந்தை அனைவருக்கும் நன்றி
ஆக்கிய ரகுமான் அவர்
அன்னையின் ஆசியை அன்பதன் ஆசியாய்
அனுபவித்து உணர்ந்து வென்றார்
வேண்டுவோம் ரகுமானின் வெற்றிகள் மென்மேலும்
விரிந்திட வேண்டி நிற்போம்
வெள்ளை மனத்தவர் ரகுமானின் வெற்றிகள்
விண்ணவர் வரமாய் வர